பேர வாவியை சுத்தப்படுத்தும் பணியை மேற்பார்வையிடவும், அதன் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்பிக்கவும் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் துறைசார் நிபுணர்கள் 12 பேர் அடங்கியுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஏரியை சுத்தப்படுத்த பலமுறை முயற்சித்தும், முந்தைய திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை.
கொழும்பில் உள்ள நான்கு பிரதான கழிவுநீர் கால்வாய்கள் உட்பட 21 கழிவுநீர் கால்வாய்கள் தற்போது பெய்ரா ஏரியில் பாய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதை ஓராண்டிற்குள் தடுத்து நிறுத்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏரியின் துர்நாற்றம் மற்றும் நிறமாற்றம் ஆகியவற்றிற்கு பாசிகளின் வளர்ச்சி கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது என்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் ஒரு வேலைத்திட்டம் குழுவால் தயாரிக்கப்படும் என்றார்.