புத்தளம் உப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு தனியார் உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், புத்தளம் உப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாடு காரணமாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து நாட்டிற்கு 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த தொகையில் 1,485 மெற்றிக் டன் அண்மையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அவற்றில் ஒரு தொகை உப்பு நேற்று புத்தளம் உப்பு நிறுவனத்திற்கு கிடைக்கவிருந்ததாகவும், ஆனால் அவை தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.