Our Feeds


Tuesday, February 18, 2025

Sri Lanka

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து தொழில் பிரதி அமைச்சர் விளக்கம்!

இன்று (18) காலை தொடங்கிய வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் 2025 வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ விளக்கம் அளித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக சிலர் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகக் கூறினார்.  சம்பந்தப்பட்ட சம்பள அதிகரிப்புடன், அரச சேவையின் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள PL 1 பிரிவின் குறைந்தபட்ச சம்பளம் 5,975 ரூபாவால் அதிகரிக்கும்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் மொத்த சம்பள உயர்விலிருந்து 7,500 ரூபாவும், மீதமுள்ள தொகையில் 30% வீத தொகையும் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »