Our Feeds


Monday, February 17, 2025

Sri Lanka

ஜே.ஆர். கூட இவ்வாறு செய்யவில்லை - திலித் எம்.பி!

சர்வஜன அதிகாரத்தின் தொம்பே தொகுதிக்கான கூட்டம் அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவின் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, 

"இந்த நாட்டின் மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டுமாயின், சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி தொழில்முனைவு ஊடாக இதனை முன்னெடுக்க வேண்டும். 

கடந்த அரசாங்கம் பாடசாலை மாணவர்களின் பாடசாலை உபகரணங்களுக்கான வரியை நீக்குவதாக தெரிவித்தது, ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்று நான் அப்போது கூறினேன். நான் கூறியது போலவே அரசாங்கமும் அதனை செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொண்டது. 

அதற்கு பதிலாக அஸ்வெசும நன்புரி கொடுப்பனவைப் பெறும் குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு 6,000 ரூபா பெறுமதியான கொடுப்பனவை வழங்குவதாக கூறுகிறார்கள். அஸ்வெசும இல்லாதவர்கள் கிராம சேவகரிடம் சென்று கடிதம் கொண்டுவர சொல்கிறார்கள். உண்மையில் விஜேவீரவை கொலை செய்ய திட்டமிட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவும் இவ்வாறானதொரு காரியத்தை செய்யவில்லை. அவர் இலவசமான புத்தகம் வழங்குவதாக கூறி ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைவருக்கும் புத்தகம் கொடுத்தார். வகுப்பறைக்குள் மாணவர்களிடையே ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருக்கவில்லை" என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »