Our Feeds


Saturday, February 22, 2025

SHAHNI RAMEES

சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது....

 

இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சாமுதித சமரவிக்ரமவின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் நேர்காணல் செய்த நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஐ.ஜி.பி உறுதிப்படுத்தினார்.

விசாரித்தபோது, பிரபல ஊடகவியாளாலர் சமுதித்த சமரவிக்ரமவும் தனக்கு நான்கு MSD அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாக
உறுதிப்படுத்தினார்.

சமுதித சமரவிக்ரம பேட்டி கண்ட நான்கு பேர் சமீப காலங்களில் மர்மமான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர்.

மித்தேனியாவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, 
தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு சமுதித்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதிபதிகள், குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சமுதித சமரவிக்ரம போன்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறினார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »