Our Feeds


Saturday, February 8, 2025

Sri Lanka

டெல்லியில் “மாற்றம்” பேசி ஆட்சி பிடித்த கெஜ்ரிவால் படுதோல்வி | ஆட்சியை கைப்பற்றுகிறது மோடியின் பஜக



இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். 


டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் திகதி நடைபெற்றது. 


தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 


டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், தொடக்கம் முதலே டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 


டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக 46 இடங்களிலும், ஆம் ஆத்மி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 


காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »