கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த வரை சென்ற ரயிலை இடைநடுவில் கொக்கல நிலையத்தில் நிறுத்தி விட்டு இறங்கி சென்ற சாரதி பணியில் இருந்து நீக்கப் பட்டதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என். ஜே. திரு.இடிபோலகே இன்று (7) பிற்பகல் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் சாரதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (6) காலை மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து ஓடத் தொடங்கிய குறித்த சாரதி, தமக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து கொக்கல புகையிரத நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.