Our Feeds


Saturday, February 15, 2025

Sri Lanka

பைசல் எம்.பியின் சகோதரருக்கு விளக்கமறியல்!

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாரவில பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (14) காலை கொஸ்வத்த, ஹால்தடுவன பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த மோட்டார் வாகனம், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார். 

அதன்படி, நேற்று விபத்து நடந்த போது வாகனத்தின் சாரதியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் உறவினரை கொஸ்வத்த பொலிசார் கைது செய்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »