Our Feeds


Thursday, February 6, 2025

SHAHNI RAMEES

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித் தூதுவர்.

 

துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை  கடந்த வியாழக்கிழமை (30) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். 

பாராளுமன்ற இராஜதந்திரம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

பாராளுமன்றத்துக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியையும் சந்தித்தார். 

இதன்போது பொதுவான ஆர்வமுள்ள துறைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் பங்களிப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய துருக்கித் தூதுவர், இலங்கைக்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான துருக்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »