ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயற்கை நுண்ணறிவால்
(Artificial intelligence) இயங்கும் ‘யான’ (Yaana) என்ற சாட்போட் ஊடாக வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது.செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்க தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயணிகளின் கேள்விகளுக்கு 'யானா' சாட்போட் பதிலளிக்கிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சர்வதேச விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் தெரிவிக்கையில்,
‘யான’ ஏஐ சாட்போட் சுமார் 12,000 பயணிகளின் கேள்விகளுக்கு 88 சதவீதம் சுயாதீனமாக பதிலளித்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
குறித்த வாடிக்கையாளர் சேவை சாட்போட் கோட்ஜென் இன்டர்நேஷல் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இதனை தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன இணையதளத்தில் பயன்படுத்தலாம்.
புதிய சாட்போட் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.