இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
