அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் பெரும்போகத்துக்கான நெல் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை நேற்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
