கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 5 மின் காற்றாடிகளில் ஒரு காற்றிடியின் 3 சிறகுகளில் ஒரு சிறகு உடைந்து அருகில் இருந்த வீட்டின் மேல் விழுந்ததில் வீடு முழுமையாக சேதமடைந்தது.
மேலும் குறித்த நேரம் வீட்டின் உரிமையாளர்கள் தோவைகள் நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்ததால் எவருக்கும் எந்த அசம்பாவிதங்களும் இடம்பெற்றிருக்கவில்லை. இருப்பினும் குறித்த வீடு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




(கற்பிட்டிச் செய்தியாளர் ஹஸ்லான் ரஸாக்)