Our Feeds


Saturday, February 15, 2025

Sri Lanka

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை – அமைச்சர் சரோஜா!


ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு தனது ஒன்பதாவது அறிக்கை தொடர்பான பரிசீலனையை நிறைவு செய்துள்ளது.

குறித்த அமைப்பின் பிரதிநிகளுக்கும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அடங்கிய தூதுக்குழுவும் இது தொடர்பில் இன்றைய கலந்துரையாடியுள்ளது.

அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த நாட்டின் தேசிய செயல் திட்டத்தைப் இந்த குழு பாராட்டியதோடு குழந்தை திருமணம் மற்றும் உள்ளக வன்முறை அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்து சரோஜா போல்ராஜ் அடங்கிய குழுவிடம் குறித்த அமைப்பு கேள்வியெழுப்பியது.

“முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 2022 இல் திருத்தப்பட்டது, ஆனால் சட்டத்தின் கூறுகள் குறித்து இன்னும் குறைகள் உள்ளன. குழந்தை திருமணத்தை தடை செய்வது உட்பட சட்டத்தை மேலும் திருத்த திட்டங்கள் இருந்ததா?”

என்றும் இலங்கைக்கான குறித்த குழுவின் அறிக்கையாளர் “யமிலா கொன்சாலஸ் பெரர்” கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் “சரோஜா போல்ராஜ்”

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புடன் நாட்டின் முதல் ஈடுபாடு இதுவாகும் என்பதால்,  இந்த மதிப்பாய்வு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும், அதன் திருத்தம் குறித்தும் அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பதற்கும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல துறைகளைக் கொண்ட குழுவை நிறுவுவதற்கும் மகளிர் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்ததாக சரோஜா போல்ராஜ் மேலும் கூறினார்.

குடும்ப வன்முறை குறித்து, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும் திருத்தப்பட்ட சட்டம் இந்த ஆண்டு அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ள அமைச்சரின் குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிச் சட்டம், பாதிக்கப்பட்டவர்கள் மரியாதையுடனும் தனியுரிமையுடனும் நடத்தப்படுவதற்கும், சட்ட, மருத்துவ மற்றும் உளவியல் உதவியைக் கோருவதற்கும் உள்ள உரிமைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய இலவச தொலைபேசி இலக்கம் அமுலில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவுக்கும் இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் குழுவுக்கும் இடையில் பெண்கள் தொடர்பான பல பிரிவு பேச்சுவாத்தைகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு லிங்க்...

https://www.ungeneva.org/en/news-media/meeting-summary/2025/02/examen-de-sri-lanka-au-cedaw-les-normes-culturelles-lacces-des?utm_content=bufferd87d2&utm_medium=social&utm_source=twitter.com&utm_campaign=buffer (DC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »