Our Feeds


Monday, February 24, 2025

Sri Lanka

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையில் சந்திப்பு!



ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (24) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc-André Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் Patrick Mc Carthy ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான ஆதரவை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின்  இலங்கைப் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கையும்  விடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »