தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்கள் எதிர்வரும் மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோடகொட, ஏ.எச்.எம்.டி நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுக்களை மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.