மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய
புகையை சுவாதித்ததில் பாதிப்புக்குள்ளான நால்வர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவை பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒரு மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.
இதன் போது, அதிலிருந்து வெளியான புகையை சுவாசித்த கடையிலுள்ள ஊழியர்கள் நால்வர் திடீர் சுகயீனமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 25 மற்றும் 35 வயதுக்கிடைப்பட்ட ஒரு ஆணும் மூன்று பெண்களும் ஆவர்.