அரசாங்கம் நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் கடந்த கால அரசாங்கத்தை குறைகூறி தப்பிக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் கடந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்து வந்திருக்கிறது. அதனால் அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாக தலைவர் ராேஹன விஜேவீர அதேபோன்று முன்னாள் தலைவர் சோமசங்கச அமரவீர ஆகியோர் பார்த்தால் கவலைப்பட்டிருப்பார்கள். என்றாலும் இவர்கள் சோசலிச கொள்கையில் இருந்து மாறி இருப்பதையிட்டு நாங்கள் மகிழச்சியடைகிறோம்.
ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் நாட்டின் அபிவிருத்திக்கு எதிராக செயற்பட்வந்தது. திந்த பொருளாதாரம், லிபரல்வாத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
சோசலிச கொள்கையை கைவிடுவது பாரிய காட்டிக்கொடுப்பு என்றே ராேஹன விஜேவீர போன்ற தலைவர்கள் தெரிவித்து வந்தனர். என்றாலும் ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் இந்த மாற்றம் நாட்டுக்காக என்றே நாங்கள் நினைக்கிறோம்.
அத்துடன் அரசாங்கத்தில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் எந்த விடயத்தை தெரிவிக்க முற்பட்டாலும் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கை என்று குற்றம் தெரிவித்து வருவதை காண்கிறோம். ஆனால் அந்த அனைத்து ஆட்சியாளர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்து வந்திருக்கிறது.சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ்வை ஆட்சிக்கு கொண்டுவர நாங்கள் நாங்கள் ஆதரவளி்க்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ் அல்லது அவரின் குடும்பத்தினர் ஊழல் மோசடி செய்திருந்தால் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்பு கூறவேண்டும். மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்திருக்கிறது.
ஆனால் ஜேஆர்.டட்லி, பிரேமதாச போன்ற எமது தலைவர்கள் இந்த நாட்டுக்கு செய்த அபிவிருத்தி திட்டங்கள் காரணமாகவே இன்று அநுரகுமார ஜனாதிபதிக்கு வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க முடியுமாகி இருக்கிறது.மக்கள் விடுதலை முன்னணி ஊழல் மோசடிக்குக்கு எதிராக செயற்பட்டு சந்ததை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாதங்களில் சுங்கத்தில் இருந்து பரிசீலனை இல்லாமல் 300க்கும் மேற்பட்ட கொள்கலன்களை விடுவித்திருக்கிறது. அதேபோன்று நிராகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு காற்றாலை மின் உற்பத்தியை வழங்கி இருப்பது. இதுபோன்று விடயங்கள் நாங்கள் எதிர்காத்தில் பேசுவோம். ஊழலுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை நாங்கள் வரவேட்கிறோம்.
என்றாலும் இவர்கள் எங்களை விமர்சிக்கும்போது அதில் நியாயம் இருக்கவேண்டும். ஏனெனில் எமது அரசாங்க காலத்தில் நாங்கள் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த பல வேலைத்திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணியே ஆர்ப்பாட்டம் செய்து தடுத்து நிறுத்தியது. அதேபோன்று இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவர காலத்தில் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை கணக்கிட்டு பார்த்தால் 250 டொலர் பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இவர்கள் தங்களை சுத்தமானவர்கள் என தெரிவிக்க முற்படக்கூடாது என்றார்.
(எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்)