Our Feeds


Saturday, February 22, 2025

Sri Lanka

LTTE மற்றும் NTJ உட்பட 15 அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு!


தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புகள், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மீண்டும் மீண்டும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, அந்த அமைப்புகளின் நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 15 பயங்கரவாத அமைப்புகள் பின்வருமாறு..

1. தமிழீழ விடுதலைப் புலிகள் 

2. தமிழர் புனர்வாழ்வு அமைப்பு 

3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு 

4. உலக தமிழர் இயக்கம் 

5. நாடு கடந்த தமிழீழ அரசு 

6. உலக தமிழர் நிவாரண நிதியம் 

7. தலைமையகக் குழு 

8. தேசிய தௌஹீத் ஜமாஅத் 

9. ஜமாதே மிலாதே ஈப்ராஹிம் 

10. விலாயத் அஸ் செய்லானி 

11. கனேடிய தமிழர் தேசிய அவை 

12. தமிழ் இளைஞர் அமைப்பு 

13. டருல் ஆதர் அத்தபவியா 

14. இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் 

15. சேவ் த பேர்ள்ஸ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »