கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக இருப்பதனால், அண்மையில் பத்திரிகையில் வெளிவந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுத் தொடர்பாகவும் அமைச்சரவை பேச்சாளர் பாராளுமன்ற அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் பேசப்பட்ட விடயமும் எல்லா தேசிய பத்திரிகைகளும் இன்று வெளிவந்துள்ள சூழ்நிலையில் இதுசம்பந்தமாக சில வார்த்தைகள் பேச நான் கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக கல்முனைப் பகுதியில், மத அமைப்புகளினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும், அதன் காரணமாக உளவுப் பிரிவினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இக்கூற்றுகள் மூலம் எனது தொகுதியின் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் இது பொதுப்படையாக சொல்லி இருக்கின்றார்களே தவிர குறிப்பிட்டு ஒரு அமைப்பை பற்றி சொல்லவில்லை.
கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா போன்ற இஸ்லாமிய மத அமைப்புகள் உட்பட இஸ்லாமிய சமூகம், தீவிரவாத தொடர்பான விசாரணைகளுக்கும் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் செயற்பட தயாராக உள்ளார்கள்.
எங்கள் மக்களுக்கும் இது போன்ற வித்தியாசமான போக்குகளில் உள்ள குழுக்களின் பின்னணியும் அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் ஆர்வமாகத்தான் இருக்கின்றார்கள்.
In fact, we also want the authorities to investigate the activities that have allegedly taken place in our area, of course in accordance with the law. In particular, we wish to identify the forces financing, patronising and orchestrating such activities. The fear of a ‘deep state’ looms in our minds too, as it may not be under the government's control.
ஏனென்றால் இதுவும் ஒரு ‘டீப் ஸ்டேட்’ நடவடிக்கையாகவும் இருக்கலாம். அப்படி என்றால் சில நேரங்களில் அரச கட்டுப்பாட்டையும் மீறி சம்பவங்கள் நடைபெறலாம்.
ஆனால் இந்த புலனாய்வும் விசாரணையும் சட்டத்துக்கு அமைவாக நடக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கேநான் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.
இதற்கு முன்பும் முஸ்லிம் சமூகத்தால், முன்-எச்சரிக்கைகள் வழங்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட தவறிய காரணத்தினால், ஸஹரான் உடைய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். அதுவும் ஒரு டீப் ஸ்டேட் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
மற்றுமொரு சஹ்ரான் சம்பவம் இந்நாட்டில் ஒரு நாளும் நடக்கக் கூடாது.
We do not want another Zahran incident, where, despite early warnings and cooperation by the Muslim community, authorities failed to act in a timely and responsible manner.
In fact there is a prevalent culture of early warning within the Muslim community that needs to be nurtured and respected.
நாளை எங்கள் மீது பழி சுமத்த சில தீய சக்திகள் முயற்சி செய்யலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த இந்த தீய சக்திகள் நிச்சயமாக முயலும்.
ஆகவே தான் தீவிரவாதத்தை தடுப்பதற்கு நாங்கள் கல்முனை வாழ் முஸ்லிம் மக்கள் எப்பொழுதும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள் என்று மிகத் தெளிவான செய்தியை சொல்லி வைக்க விரும்புகின்றேன்..
இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிக்கைகளில், தேவையற்ற பயம் மற்றும் சந்தேகங்கள் உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை.
ஆகவே இப்படிப்பட்ட பொதுவான கூற்றுக்கள் மூலம் முஸ்லிம் சமூகத்துக்குள் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ செயல்படுகின்றது என்று பழைய தப்பான அபிப்பிராயம் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்தப் பதத்தை வைத்தே பேரினவாத தீவிரவாத சக்திகள் எங்களை முடக்க முயல்வார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
உண்மையிலேயே ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற பதமே அடிப்படையிலே இஸ்லாமிய கொள்கைக்கு முரண்பட்டது என்பதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன்.
ஆகவே அமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுபடுத்திய ஒரு அறிவிப்பு அமைச்சரினால் வழங்கப்பட வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இது சம்பந்தமாக உரிய புலன் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட நடவடிக்கை என்னவென்றும் தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம்.