இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் பண்டார, நபரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அஷேன் பண்டாரவின் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவருடன், வீதியை மறித்து கார் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Sunday, March 9, 2025
கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »