நாடு முழுவதும் நாளை (6) நடத்த திட்டமிடப்பட்டிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் மூலம் சுகாதாரத் துறையின் கொடுப்பனவுகளைக் குறைப்பது தமது தொழிலையும் பாதிக்கும் என்று குற்றம் சாட்டி, இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
இருப்பினும், இன்று (5) பிற்பகல் சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மார்ச் 17 ஆம் திகதி காலை 8.00 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Wednesday, March 5, 2025
சுகாதார நிபுணர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »