Our Feeds


Sunday, March 2, 2025

SHAHNI RAMEES

"இன்னொருவரின் போருக்கான போர்க்களமாக இலங்கை மாறுவதை ஒருபோதும் அனுமதிக்ககூடாது! - அலி சப்ரி எச்சரிக்கை

 


உக்ரைன் நெருக்கடி மூலம் இலங்கை கற்றுக்கொள்ளக்கூடிய

பாடங்கள் சுலபமானவை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இன்னொருவரின் போருக்கான போர்க்களமாக நாங்கள் மாறுவதை ஒருபோதும் அனுமதிக்ககூடாது.  எங்கள் இறைமை பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்ட விடயம் என்பதை நாங்கள் உறுதிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்


ஏன் இலங்கை தொடர்ந்தும் அணிசேராக்கொள்கைகயை பல நாடுகளுடன் அணிசேரும் கொள்கையை பின்பற்றவேண்டும் உக்ரைனின் தோல்வியிலிருந்து பாடங்கள் என்ற  சமூக ஊடக பதிவில்இதனை  தெரிவித்துள்ள அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.




வல்லரசுகளின் அதிகார போட்டியால் துருவமயப்படுத்தப்பட்டுள்ள உலகில் இலங்கை காலத்தினால் உறுதி செய்யப்பட்ட அதன் வெளிவிவகார கொள்கையான அணிசேரா கொள்கையில் உறுதியாகயிருக்கவேண்டும்


இந்து சமுத்திரத்தில் எங்கள் புவிசார் அமைவிடம் காரணமாகவும் , பொருளாதார அபிலாசைகள் காரணமாகவும் ,நீண்ட கால ஸ்திரதன்மை தேவை என்பதாலும்,நாங்கள் புவிசார் அரசியல் போட்டிகளில் சிக்காமல் உலகின் அனைத்து நாடுகளுடனும் ஈடுபாட்டை முன்னெடுப்பது அவசியம்.


பாரிய வல்லரசுகள் இடையிலான மோதலின் நடுவில் சிறிய அல்லது ஒரளவு சிறிய நாடுகள் சிக்கிக்கொள்ளும்போது  என்ன நடக்கும் என்பதை உக்ரைனில் தொடரும் நெருக்கடிகள் தெளிவாக நினைவூட்டியுள்ளன.


இலங்கையை பொறுத்தவரை பாடம் தெளிவானது -நாம் அணிசேராத கொள்கையை பின்பற்றவேண்டும் ஆனால் பல அணிகளுடன் ஈடுபாட்டை பேணவேண்டும்,சிக்கல்களை தவிர்க்கவேண்டும் மேலும் எமது இறையாண்மை என்பது ஒரு போதும் சமரசம் செய்யப்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும்.


உக்ரைன் நெருக்கடி சிறிய நாடுகளிற்கான எச்சரிக்கை கதை


உக்ரைனின் துயரம் என்பது வெறுமனே ஒரு தொலைதூர யுத்தமில்லை.இது அனைத்து சிறிய நாடுகளிற்கும் உண்மையான அரசியல் பற்றிய ஒரு பாடம்.


கடந்த இரண்டு தசாப்தங்களாக உக்ரைன் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பிளவுக்கோட்டில் சிக்குண்டிருந்தது.


ஒரு தரப்புடன் நெருக்கமாக இணைந்திருப்பதன் மூலம் அதுமற்றொரு தரப்பிற்கு தனது இருப்பு பற்றிய அச்சத்தை  ஏற்படுத்தியது.


நெருக்கடி தீவிரமடைந்தபோது யுத்தத்திற்கான முழு செலவுகளையும் சுமக்கவேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டது.


அதன் நகரங்கள் வெறும் கற்குவியல்களாக மாறின,அதன் பொருளாதாரம் முற்றாக சீர்குலைந்தது,மில்லியன் கணக்கான உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.


வலுவான பாதுகாப்பு உதவி ஆதரவு கிடைத்த போதிலும்,உக்ரைன் மிக மோசமான விளைவுகளை சந்தித்துள்ளது.அதற்கு கிடைத்த பொருளாதார இராணுவ உதவிகளிற்காக அது பெரும் விலையை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது- உயிர் இழப்புகள் பொருளாதார சீர்குலைவு.


மேற்குலகம் மிகப்பெரும் ஆதரவை வழங்கிய போதிலும் புவிசார் போட்டியின் பெரும் போர்க்களமாக மாறுவதில் இருந்து உக்ரைனால் தப்ப முடியவில்லை.


இலங்கையை பொறுத்தவரை இதன் மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் சுலபமானவை.


இன்னொருவரின் போருக்கான போர்க்களமாக நாங்கள் மாறுவதை ஒருபோதும் அனுமதிக்ககூடாது.  எங்கள் இறைமை பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்ட விடயம் என்பதை நாங்கள் உறுதிசெய்யவேண்டும்.


மேலும் எங்களின் வெளிவிவகார கொள்கைகளை  எங்களின் தேசியநலன்களே தீர்மானிப்பதை நாங்கள் உறுதி செய்யவேண்டும்.எங்களின் வெளிவிவகார கொள்கைகளை உலகின் பலம்பொருந்திய நாடுகளின் மூலோபாய அபிலாசைகள் தீர்மானிக்ககூடாது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »