Our Feeds


Wednesday, March 5, 2025

Sri Lanka

நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய தேவை எமக்கில்லை - சஜித்!


நமது நாட்டை சிக்கலில் தள்ளி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து, உயர் பதவிகளுக்கு வர நாம் ஒருபோதும் தயார் இல்லை. அசாதாரணமான, கடினமான இலக்குகளுடனான உடன்பாடுகளை  ஏற்படுத்தியதன் காரணமாக ஒரு நாடாக நாம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டுள்ள இந்த நிபந்தனைகளைத் திருத்தி,  மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தானும் திசைகாட்டியும் இந்த இணக்கப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கினோம்.

ஆட்சிக்கு வந்த திசைகாட்டியானது ஏலவே இருந்த சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எந்த மாற்றமுமின்றி முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக இந்த அரசாங்கமானது மக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் துரோகமிழைத்துள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைப் பார்க்கும் போது எந்த அபிமானமும் கொள்ள முடியாது. இன்று சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியாகும் வரையில் அரச ஊழியர்களால் சம்பள அதிகரிப்பை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »