தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியலிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான கூட்டு நடவடிக்கை பதில் பாலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தர பகுதியிலுள்ள வீடு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று பிற்பகல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சுமார் மூன்று வாரங்களை அண்மிக்கின்ற போதிலும், காவல்துறைமா தேசபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரைக் கண்டுபிடிப்பதற்காக ஆறு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.