மதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழு எடுத்த முடிவின்படியே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகமும் இந்த தடையை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாட்டிற்குள் மதப் படைப்புகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sunday, March 9, 2025
மதங்கள் தொடர்பில் எழுதப்பட்ட புத்தகங்கள் இறக்குமதி தடை நீக்கம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »