க.பொ.த சாதாரண தர பரீட்சையில்இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க, கண்காணிப்பாளர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி பரீட்சைக் காலத்தில் மாணவர்களின் நடத்தை குறித்து கண்காணிப்பதற்கு கண்காணிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சி அளிக்கப்படும்.
இதேவேளை மார்ச் 17 முதல் 26 வரை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத்திணைக்களம் உறுதியளித்துள்ளது.
இதற்கிடையில், இந்த மாதம் 15 ஆம் திகதி பரீட்சைமையங்களுக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்படும் என்றும் பரீட்சைத்திணைக்களம் உறுதியளித்துள்ளது.