பட்டலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார்.
அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன் அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது.
அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில்விக்கிரமசிங்க பின்னர் அந்தஅறிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.