கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, இந்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனிக் கட்சியும் நூற்றுக்கு 50 சதவீதத்துக்கு அதிக வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்ளாமையின் காரணமாகவே இந்தப் பதவிக்கு இவ்வாறு உத்தியோகபூர்வ வாக்கெடுப்பொன்றை நடத்த நேர்ந்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அல்லது அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.
அதற்கமைய தற்போதைய நாட்களில் கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களை வெற்றிகொள்வதற்காக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.