Our Feeds


Thursday, May 29, 2025

SHAHNI RAMEES

பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு ; 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

 

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாணவர்களும் இன்று வியாழக்கிழமை (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »