ஜனாதிபதி தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் (Carrom) மற்றும் தாம் (Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகளுக்கிடையே, கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.