Our Feeds


Friday, May 30, 2025

Zameera

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரின் ஊழல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்


 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் 20 பேரின் கடந்தகால நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டமை  குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு  அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால இதனை தெரிவித்துள்ளார்.

சில ஊழல்கள் பத்துபதினைந்து வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றவை முன்னைய பல அரசாங்கங்கள்  அவற்றை அப்படியே மூடிமறைத்துவிட்டன என தெரிவித்துள்ளஅவர்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவற்றை மீண்டும் விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளது,சிஐடியினரை விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சிஐடியினர் விசாரணை செய்து வருகின்ற இந்த ஊழல்மோசடிகள் குறித்து என்னால் மேலும் கருத்து கூறமுடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன இவர்களில் சிலர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

சில அதிகாரிகளும் உள்ளனர் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சில குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »