Our Feeds


Friday, May 30, 2025

SHAHNI RAMEES

சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை பார்வையிட்டார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

 


கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல்

குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை வியாழக்கிழமை (29) கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார். 


கிளிநொச்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது. 



இதனால் பெருமளவான வயல் நிலங்கள்,  நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து  வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையிலேயே பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி  வரை  மணல் அகழ்வது  தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.  


இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »