Our Feeds


Thursday, May 22, 2025

SHAHNI RAMEES

3,147 புதிய தாதியர்கள் நியமனம்!

 


நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு

நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, சனிக்கிழமை (24) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெறுவுள்ளது.


நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த விழாவிற்கு இணையாக, தாதியர் சேவையில் 79 விசேட தர அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் நடைபெற உள்ளன.


பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்கும் விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்து கொள்ள உள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »