இவ்வருடம் ஆரம்பித்து இதுவரையான காலப்பகுதியில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவ்வருடம் ஆரம்பித்து இதுவரையான காலப்பகுதியில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்ட 31 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக 100இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட, 41 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அந்த துப்பாக்கிகளில் 27 கைத்துப்பாக்கிகளும் ஏனைய 14 துப்பாக்கிகள் ரி-56 வகை துப்பாக்கிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.