கோமரன்கடவல, இந்திகட்டுவெவ பகுதியில் காட்டு யானை
தாக்கியதில் 7 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.சிறுமி தனது தந்தையுடன் சைக்கிளில் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானை சைக்கிளில் மோதியதால் தந்தை கீழே விழுந்த பின்னர் சிறுமியை யானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.