இரவு நேர தபால் ரயில்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு தபால் ரயில் பதுளை ரயில் நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் ஆரம்பித்து ஹாலி-எல ரயில் நிலையத்திற்குச் சென்றது, ஆனால் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பதுளை ரயில் நிலையத்திற்குத் திரும்பியுள்ளது.