அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில், ரஜரட்ட குயின் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் முச்சக்கர வண்டி இன்று (02) காலை மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர் காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆவார்.
பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரஜரட்ட குயின் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.