ஹக்கீம் முஷாரப் மீண்டும் சந்திப்பு
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்கு சுயேட்சையாக போட்டியிட்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷார்ரப் உடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு மு.க முயற்சித்து வரும் நிலையில் முஷார்ரபுடனான பேச்சுக்களும் கட்டம் கட்டமாக நடந்து வருகின்றன.
முஷாரப்பை மு.க வில் இணைத்துக் கொள்வதற்கான
மிக முக்கிய கலந்துரையாடலொன்று நேற்றிரவு கொழும்பின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிலையில், மு.க தலைவர் ஹக்கீம் MP, கட்சியின் செயலாளர் நிசாம் கரியப்பர் MP, பிரதித்தலைவர் ஹிஸ்புல்லாஹ் MP, உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் MP முஷாரப் தரப்பிலிருந்து பொத்துவில் உலமா சபை தலைவர் மற்றும் உலமாக்கள், அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளன தலைவர் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.தேர்தலில் மொத்த வெற்றி பெற்றுள்ள முஷாரப்பை கட்சியில் இணைந்துக் கொள்வதுடன் அவருடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் விரைவில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பார்க்காத திருப்பமாக சுயேட்சையாக களமிறங்கிய முஷாரப் தலைமையிலான குழு அதிகப்படியான உறுப்பினர்களை வென்று மு.க உள்ளிட்ட பழைமையான கட்சிகளுக்கே ஆச்சரியம் அளித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.