Our Feeds


Friday, May 30, 2025

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த ஜம்பர் அணிந்து சிறைச்சாலையின் அச்சுத் துறையில் பணி!

 


கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடுங்காவல்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், சாதாரண கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் பொதுவான சிறைச்சாலை அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதன்படி, இருவருக்கும் ஜம்பர், பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சதோச மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கேரம் போர்டுகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை சட்டவிரோதமாக விநியோகித்ததாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53.1 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை அறிவித்தது.


தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு முன்னாள் அமைச்சர்களும் நேற்று மதியம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.


இரண்டு முன்னாள் அமைச்சர்களும் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் சாதாரண கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறைக்கு மாற்றப்பட்டனர்.


தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நீதிமன்றத்தால் அணியும் "ஜம்பர்" இருவருக்கும் அணிய வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.


இதற்கிடையில், அவர்கள் இன்று சிறைச்சாலைப் பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுத் துறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »