Our Feeds


Friday, May 16, 2025

Zameera

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற அறுவர் கைது


 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாவர்.


மற்ற இருவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாவர்.

 

இவர்கள்  சம்பந்தப்பட்ட குழுவை அழைத்து வர இந்த நாட்டிலிருந்து படகில் சென்றவர்கள் ஆவர்.


மேலும் விசாரணையில், மற்ற நால்வரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்த ஒரு குழு என்பதும், அங்குள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து மீண்டும் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »