Our Feeds


Wednesday, May 21, 2025

Zameera

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்


 ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள், 30% நன்மைகளை செலுத்தல், புதிய நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் பி கார்டுகளை திருத்துதல் ஆகியவை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அலுவலகங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். 

குறித்த சேவைகளைப் பெற 011 2201201 என்ற எண்ணை அழைத்து திகதியை முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

title

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »