Our Feeds


Thursday, May 22, 2025

SHAHNI RAMEES

இஸ்ரேலின் கொலனியாக மாறிவிட்ட அறுகம்பைப் பிரதேசம்...! - கலாநிதி தயான் ஜயதிலக...!!


இஸ்ரேலின் கொலனியாக மாறிவிட்டஅறுகம்பைப் பிரதேசம்...!

ரணில் அரசாங்கத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்டது அநுர அரசாங்கத்தில் தொடர்கிறது கலாநிதி தயான் ஜயதிலக...!!

இலங்கையின் பல்வேறு இடங்களில்  குறிப்பாக அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து அன்மைக் காலமாக பல வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்று வரும் நிலையில் சர்வதேச அரசியல்

ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக நேற்று ஜே  . ஆர்  ஜயவர்தன கலாசார நிலையத்தில் இடம் பெற்ற அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன ஸ்தாபகர் தின நிகழ்வில் கலந்து கொண்டு  கருத்துத்

தெரிவிக்கையில்...

யூதர்களே இல்லாத ஒரு நாட்டில் எதற்கு சபாத் வழிபாட்டுத் தளங்கள் இருக்கின்றன இவை  வெறும் வழிபாட்டுத் தளங்கள் அல்ல உண்மை யில் இவை குறிப்பாக வலதுசாரி தீவிர சியோ னிச மதப் பிரிவுக்கான தலங்கள் இவற்றுக்கு  இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்க ப்படுகின்றது இதற்கு  நாம் என்ன செய்யப் போகிறோம் எனக் கேள்வி எழுப்பியதோடு

இலங்கையில் எங்களுக்கு இரு தரப்பையும் சார்ந்த கொள்கையே  இருந்தது அது வலது சாரியாக இருந்தாலும் சரி  இடதுசாரியாக இருந்தாலும் சரி அப்போது  பண்டாரநாயக்க அம்மணி இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தார்

இப்போதும்  எங்களுக்கு இந்த இரு தரப்பையும் சார்ந்த கொள்கை இருக்கிறது ஆனால்  இலங்கை இப்போது காசாவில் ஏறக்குறைய ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கின்ற  IDF வீரர்களுக்கான  ஓய்வுக்கும் பொழுது போக்குக்குமான தளமாக மாறியுள்ளதோடு

அறுகம்பையில் உள்ள இலங்கையின் இளம்  நீர்ச் சறுக்கல்காரர்கள்  இது கிட்டத்தட்ட இஸ்ரேலியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக மாறியிருக்கிறது  என்று எதிர்ப்பு வெளியிட்டு  வருகின்றனர் எனக் கூறிய அதேவேளை

மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் மனுஷ

 நாணயக்கார ஆகியோரின் அரசாங்கத்தின் கீழ் இலங்கை அப்படித்தான் மாறிவிட்டது

என்றுதான்  சொல்ல வேண்டும் அதாவது ரணில் நிர்வாகத்தில் ஆரம்பிக்கப்பட்டதை தற்போதைய  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் தற்போதைய அரசாங்கத்தில் இது தொடர்கிறது எனக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது

மேலும் இஸ்ரேலின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட தயான் ஜயதிலக ..

உலகில் எந்தவொரு நாட்டுக்கும் நடக்காத நிலை பலஸ்தீனர்களுக்கு நடைபெற்று வருகின்றது பலஸ்தீனத்தில் 80 வீதமான சிறுவர்களும் பெண்களும் அநியாயமாக வினாடிக்கு வினாடி  இஸ்ரவேலர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் அங்கு பட்டி

னிச் சாவு இடம்பெறுகின்றது இதனை உலக நாடுகள் வெறுமனே பார்த்துக் கொண்டிரு க்கிறது இந்நாடுகளால் அதனை தடுக்க முடியாமலுள்ளது

நான் ஜெனிவாவில் இரண்டு முறை ஜ.நா இலங்கைப் பிரநிதியாக பதவி வகித்த காலத்தில் பலஸ்தீன் நாட்டுக்குச் சார்பாகவே பல தீர்மாணங்களை எடுத்து வந்தேன் உண்மையில்  அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச மற்றும்  சந்திரிக்கா பண்டாரநாயக்கக காலங்களாகும்

ஆனால் முஸ்லிம் வாக்குகளையும் ஆதரவை யும் பெறும் முஸ்லிம் தலைவர்கள் நாடாளு மன்றத்தில்  உள்ளனர் அவர்கள் காரசாரமாக பேசுவதற்கும் இதை தடுப்பதற்கும் திரானியற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாவே இவர்களைக் கான்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »