காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு..
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு "இதயம்" செயற்திட்டத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான "மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை- வாய்ப்புற்று நோய் தொடர்பான இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (11) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்
அஷ் ஷஹீத் ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டலில் இதயம் செயற்றிட்ட தலைவர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் ஸ்கை தமிழ் செய்தி ஆசிரியர் சிம்ரா நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் அலிமா ரஹ்மான்,கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலைபொது முகாமையாளர் ஏ.எஸ்.ஏ. இஸ்ஸதீன், தாதிய உத்தியோகத்தர் வளவாளர் அனிதா அற்புதராஜா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வை ஏறாவூர் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் மார்பக புற்றுநோய் தடுப்புப் பிரிவு ஒழுங்கமைத்ததுடன் காத்தான்குடி ஜுவலினா நிறுவனம் அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.