தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை ( 26) காலை சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த அரசாங்கத்தின் போது, தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.