விஞ்ஞானம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான
பாராளுமன்ற துறைசார் மேட்பார்வைக் குழுவில் (Sectoral Oversight Committee) உறுப்பினராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று சபாநாயகர் அறிவித்தார்.