இலங்கைக்கு சுதந்திரம் கேட்டு போராடும் போதும் பல நாடுகள் சுதந்திரம் தருவதற்கு எதிராகத்தான் நின்றார்கள். இறுதியில் நாம் வென்றோம். சுதந்திரம் பேற்றோம். அதே நிலைதான் தற்போது பலஸ்தீனுக்கும். இன்று பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கும் பல நாடுகளும் விரைவில் அங்கீகாரம் வழங்குவார்கள். பலஸ்தீனம் சுதந்திர நாடாக மாறுவதை நாம் பார்ப்போம். என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற பாலஸ்தீன அப்பாவிகளுக்கு எதிரான முதலாவது இனச் சுத்திகரிப்பு - நக்பா தின நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.