முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்கவுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸில் நேரடியாக இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளை முஸ்லிம் கட்சிகளே பெரும்பாலும் கைப்பற்றியுள்ள நிலையில் பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், அஇமக, ஆளும் NPP, மற்றும் எதிர்க்கட்சியான SJB உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில் அன்னாசிப் பழ சின்னத்தில் சுயேற்சைக் குழுவை களமிறக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்டார்.
இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு இன்னும் குறைந்தது ஒரு உறுப்பினரின் ஆதரவாவது தேவையென்கிற நிலையில் அது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், மு.க வின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக முஷர்ரப் முதுநபீன் பொறுப்பேற்கும் நிலையில் பிரதித் தவிசாளர் பதவி மு.கா உறுப்பினருக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.