முன்னால் பாராளமன்ற உறுப்பினரும் தற்போதைய பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபை எழு (07) உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நேரடியாக இணைத்து கொள்ளும் நிகழ்வு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ( MP) முன்னிலையில் நாளை 25.06.2025 (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் ShortNews க்கு கிடைத்துள்ளன.
மு.க வில் உத்தியோகபூர்வமாக இணைந்த பின் எதிர்வரும் 27ம் திகதி பொத்துவில் பிரதேச சபைத் தலைவராக முஷர்ரப் தெரிவாகுவார் என அறியக் கிடைக்கிறது.