தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்த திட்டம் எதுவும் இல்லை
என கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.அவர் இதனை பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04) தெரிவித்துள்ளார்.
"மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் மற்றும் சிரமங்களை குறைக்க மட்டுமே நாங்கள் பரீட்சையில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை பாடத்திட்டங்களில் நடைமுறை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.